கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் சுதாகர். இவர் அதே ஊரில் கால்நடைப் பண்ணை ஒன்று நடத்திவருகிறார். இந்தப் பண்ணையில் விலை உயர்ந்த பசு வகைகள், குதிரை, நாய், கோழி போன்ற பல்வேறு உயிரினங்களை வளர்த்துவருகிறார்.
2 நாள்களில் இரு கன்றுகளை ஈன்ற ஜெர்ஸி பசு!
கன்னியாகுமரி: இறச்சக்குளம் பகுதியில் உள்ள ஒரு மாட்டு பண்ணையில் பசு ஒன்று இரண்டு நாள்களில் இரு கன்றுகளை ஈன்றுள்ளது.
இந்நிலையில் அவரிடம் உள்ள ஜெர்சி இன பசு ஒன்று கன்று ஒன்றை ஈன்றது. சுதாகரும் அதோடு முடிந்துவிட்டது என எண்ணியுள்ளார். மறுநாள் மீண்டும் ஒரு கன்று குட்டியை பசு ஈன்றது. வழக்கமாக ஒரு கன்று ஈன்ற பிறகு மற்றொரு கன்று வயிற்றினுள்ளே இருந்தால் இரண்டு மணி நேரத்தில் அது இறந்துவிடும்.
ஆனால் இந்தக் கன்று 24 மணி நேரத்திற்கு பிறகு உயிரோடு எந்தவித பிரச்சினையுமின்றி பிறந்தது அப்பகுதி மக்களை வியப்புக்குள்ளாக்கியது. தற்போது பசுவும் இரண்டு கன்றுகளும் நல்ல நிலையில் உள்ளதாக சுதாகர் தெரிவித்துள்ளார்.