தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்-19 முன்னெச்சரிக்கை : ஆளில்லா குட்டி விமானம் மூலம் தீவிரமடையும் கண்காணிப்பு!

கன்னியாகுமரி : ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள குமரி மாவட்டத்தின் மீனவ கிராமங்கள் உள்ளிட்ட மக்கள் நிறைந்த பகுதிகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை காவல்துறை தொடங்கியுள்ளது.

Covid-19 Precaution: Intensified Surveillance by Unmanned Petty Aircraft
கோவிட்-19 முன்னெச்சரிக்கை : ஆளில்லா குட்டி விமானம் மூலமாக தீவிரமடையும் கண்காணிப்பு!

By

Published : Mar 26, 2020, 7:58 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் பெரும் பாதிப்படைந்துள்ள கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ள குமரி மாவட்டத்தின் தற்போது வரை வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் தொற்று பரவும் அபாயம் அதிகம் இருப்பதால் குமரி மாவட்ட நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள குமரியின் பல்வேறு பகுதிகள் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், “கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

பொதுமக்கள் நலன் கருதி தொற்றின் சமூகப்பரவலை தடுக்கும் நோக்கிலேயே அரசால் இந்த ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தேவையில்லாமல் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமென காவல்துறை சார்பில் வேண்டுகோளாக வைக்கிறோம்.

இதையும் மீறி யாராவது அநாவசியமாக வெளியே நடமாடினால், அவர்கள் மீது கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்யப்படும். குமரியில் நேற்று ஒரு நாளில் மட்டும் தேவையின்றி வெளியே சுற்றிய 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் இருசக்கர வாகனம் அல்லது கார்களில் சாலைகளில் உலா வருகின்றனர். இவ்வாறு வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதுடன் அவர்களின் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்படும். அதேபோல எவ்வளவு அறிவுரை கூறியும் டீக்கடைகள், உணவு கடைகளை திறந்து வைத்துள்ளனர். இத்தகைய கடைகளை மாநகராட்சி, சுகாதார அலுவலர்கள் உதவியுடன் சீல் வைக்க முடிவு செய்துள்ளோம்.

இது எல்லாம் பொதுமக்களின் நலனுக்காகதான் நாங்கள் செய்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்துவதை விட அவர்களே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியே வராமல் அமைதி காக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 3,600 பேர் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமல்ல அவர்கள் வீட்டு உறுப்பினர்களும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டிருக்கிறது. சுகாதார ஊழியர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வீடுகளை விட்டு வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும்.

கோவிட்-19 முன்னெச்சரிக்கை : ஆளில்லா குட்டி விமானம் மூலமாக தீவிரமடையும் கண்காணிப்பு!

இன்று முதல் குமரி மாவட்டத்தின் முக்கிய வீதிகள், சந்தைகள் டிரோன் மூலம் கண்காணிக்க தொடங்கப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களில் பொதுமக்கள் ஒன்றுசேர கூடாது என்ற சட்டம் மீறப்படுவதாக தெரிகிறது. எனவே, கடற்கரை பகுதிகளான முட்டம், சின்னமுட்டம், தேங்காய்பட்டணம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகள் கண்காணிக்கப்படும். மேலும், அடுத்த கட்டமாக குமரி - கேரள எல்லைப் பகுதிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது. இதன்மூலம் அரசின் அறிவுரையை மீறுபவர்கள் எளிதில் அடையாளம் கண்டு அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருந்து கண்காணித்து வருவது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :எனது மகளை மீட்க உதவுங்கள் - ஆட்சியரிடம் தலைமைக் காவலர் மனு!

ABOUT THE AUTHOR

...view details