தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்-19 எதிரொலி: ரயில்வே காவலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கான கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

covid-19-echo-railway-police-awareness-program
covid-19-echo-railway-police-awareness-program

By

Published : Mar 18, 2020, 11:56 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பேர் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதன்படி நாகர்கோவில் இருப்புப்பாதை காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் சார்பில் ரயில் நிலையத்திலிருந்த பயணிகளுக்கு தமிழ், ஹிந்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ரயில்வே காவல்துறையினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேலும் கை கழுவுவதில் அவசியத்தை வலியுறுத்தியும், எவ்வாறு கைகழுவ வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் பயணிகளுக்கு கை கழுவும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் ரயில்நிலையத்தில் கை கழுவுவதற்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டு பயணிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:உலக மக்களுக்காக காலபைரவருக்கு பாலபிஷேகம்!

ABOUT THE AUTHOR

...view details