இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசும், தமிழ்நாடு அரசும்
"கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் சூழ்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் சேர்ந்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அறிவிப்புகளை அரசாணையாக வெளியிடுகிறார்கள்.
அரசின் அறிவுரையை ஏற்று தடுப்பூசி போடச் சென்றால், ஒவ்வொரு தடுப்பூசி மையங்களிலும் மருந்து இல்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள். பல மையங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துவிடும்.
திமுக சார்பில்
எனவே, தமிழ்நாடு அரசு தேவையான மருந்துகளை உடனே குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். மாறாக தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ந்தால் குமரி மாவட்ட திமுக சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தப்படும்." என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'காங். எம்பி ராகுலுக்கு கரோனா!'