குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்.18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. குமரியில் திமுக கூட்டணி கட்சியில் இருக்கும் காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் சம பலத்துடன் மோதுகின்றன. வாக்குப்பதிவு நாளில் மாவட்டத்தில் உள்ள 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்குகளில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 704 வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவின் விழுக்காடு 69.61 ஆக இருந்தது.
குமரி வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் அலுவலர் ஆய்வு - MP election
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தின் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர், காவல் கண்காணிப்பாளர் இன்று ஆய்வு செய்தனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த எஸ்பி
இந்நிலையில் நாளை வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக நாகர்கோவில் அடுத்த கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், காவல்துறை பாதுகாப்பில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் இன்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு செய்தனர்.