தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெறிச்சோடிய குமரி: கழுகுப் பார்வை காட்சிகள்!

கன்னியாகுமரி: மக்கள் ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகளின்றி இரண்டாவது நாளாக இன்றும் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

kanyakumari
kanyakumari

By

Published : Mar 23, 2020, 9:12 PM IST

Updated : Mar 23, 2020, 10:22 PM IST

உலகமெங்கும் கரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடிய வைரஸ் பாதிப்பால் சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 390க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வைரஸின் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மக்கள் ஊரடங்கு நேற்று இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

வெறிச்சோடி காணப்பட்ட கன்னியாகுமரியின் கழுகுப் பார்வை காட்சிகள்

இதனிடையே சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியிலுள்ள அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணி வரை மக்கள் சுய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிப்பதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

கன்னியாகுமரியில் கடைகள் ஏதும் திறக்காமல், இரண்டாவது நாளாக இன்றும் மூடியே காணப்பட்டன. பொதுவாக கடற்கரையில் சூரிய உதயத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள். ஆனால், தற்போது மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளதால் காலை முதல் சுற்றுலாப் பயணிகளின்றி கன்னியாகுமரி கடல் காத்து வாங்குகிறது.

இதையும் படிங்க:கரோனா பீதி: '2 வாரங்களுக்கு பாலியல் தொழிலில் ஈடுபட மாட்டோம்'

Last Updated : Mar 23, 2020, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details