உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நோய் பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
கரோனா எவ்வாறு பரவுகிறது, அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல மத்திய-மாநில அரசுகள் கரோனா நிவாரண நிதிக்காக பொதுமக்கள் அனைவருக்கும் நிதி வழங்கலாம் என அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூகசேவகர்கள் நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் சங்கம் சார்பில் துணை கண்காணிப்பாளர் ஜவஹரிடம் தமிழ்நாடு அரசிடம் வழங்குவதற்காக காசோலை வழங்கப்பட்டது.
காவல் ஆளினர்கள் சங்கம் சார்பில் கரோனா நிவாரண நிதி ஏற்கெனவே, குமரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் அனைவரும் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழ்நாடு அரசுக்கு நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் - முதலமைச்சர் அறிவுறுத்தல்