கன்னியாகுமரி:கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்துவருகிறார். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் சில காரணங்களால் இயங்காமல் உள்ளது. இந்த மையத்தில் கரோனா தடுப்பூசிகள் தயாரிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.
இந்தப் பேச்சுவார்த்தை முடிந்து, விரைவில் இந்த மையத்தில் கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த மையத்தில் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டால் இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களுக்கு இங்கிருந்து தடுப்பூசிகளை விநியோகம் செய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவக் கல்லூரியில் 1,100 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் மேலும், 250 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்படவுள்ளன.