தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலருக்கு கரோனா; தக்கலை காவல்நிலையம் மூடல்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்

கன்னியாகுமரி: தக்கலை காவல் நிலைய காவலருக்கு காரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டது.

Corona to guard; Temporarily closed Thakkala police station!
Corona to guard; Temporarily closed Thakkala police station!

By

Published : Jul 17, 2020, 10:06 PM IST

குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஏற்கெனவே மாவட்டத்தில் வடசேரி, கோட்டார், தென்தாமரைகுளம் உள்பட ஆறு காவல் நிலைய காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில், தக்கலை காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் காவல் நிலையம் முழுவதும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும், தக்கலை காவல் நிலையத்தில் பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கும் மாவட்ட நிரவகம் சார்பில், கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details