கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நெல்லையை சேர்ந்த 32 வயது அலுவலர் ஒருவர் பணிபுரிந்துவருகிறார். இவர் தினமும் நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு அலுவலகத்திற்கு வந்து வேலை பார்த்து சென்று வந்தார்.
அரசு அலுவலருக்கு கரோனா - சக ஊழியர்களுக்குபரிசோதனை - சக ஊழியர்களுக்கு நாளை பரிசோதனை
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் அலுவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையொட்டி அவரது அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
![அரசு அலுவலருக்கு கரோனா - சக ஊழியர்களுக்குபரிசோதனை Corona to civil servant in Nagercoil](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-320-214-11-40-tn-tni-01-child-doctor-affected-karona-script-7204333-12062020110005-1206f-1591939805-1053-1206newsroom-1591979486-409.jpg)
தினசரி அரசு பேருந்தில் வந்து செல்லும் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் அவரை சோதனை செய்தபோது அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பணிபுரிந்த நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் அவரது அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
அந்த அலுவலர் தினமும் நெல்லையிலிருந்து பேருந்து மூலம் நாகர்கோவில் அலுவலகம் வந்ததால் மேலும் பலருக்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக அலுவலர்கள் பீதியடைந்துள்ளனர். இதனையடுத்து அவருடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசோதனைகள் செய்ய மருத்துவ துறையினர் திட்டமிட்டுள்ளனர்.