கன்னியாகுமரி:கரோனா தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த 25 பணியாளார்களை பணிக்கு வரவேண்டாம் எனக் கூறியதை எதிர்த்து, அந்த ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்றின் முதல் அலை முதல், நடபாண்டு வரை குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி மையத்திலும் சளி மாதிரிகள் எடுக்கும் பணிகளில் ஈடுபடுத்தபட்டோம்.
இதற்காக இரவு பகல் என்று பாரமால் குடும்பங்களையும் மறந்து பணியாற்றி வந்தோம். ஏற்கனவே மருத்துவ சேவைகளில் மருத்துவர்கள், செவலியர்கள் தட்டுபாடு காரணமாக மருத்துவமனை நிர்வாகம் திணறி வந்தது. இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய பணியாளர்கள் தேர்வு நடைபெற்றது.