கரோனா வைரஸ் சிகிச்சை அளிக்க, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டில், 87 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 73 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இவர்களில் 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நான்குபேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள், ஒருவர் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றியவர்.
இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலருக்கும் கரோனா உள்ளதா என்பதை கண்டறிய ஆசாரிபள்ளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது உறவினர்கள், பக்கத்து வீட்டினர், அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 4, 464 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.