தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் கரோனா கண்காணிப்பு தீவிரம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகளை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

கன்னியாகுமரியில் கரோனா கண்காணிப்பு தீவிரம்!
கன்னியாகுமரியில் கரோனா கண்காணிப்பு தீவிரம்!

By

Published : Apr 9, 2020, 10:42 AM IST

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் நான்கு பேர் சமய மாநாட்டிற்கு சென்றுவந்தவர்கள். ஒருவர் 88 வயதான மூதாட்டி. மேலும் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர்.

இதனையடுத்து அவர்கள் வசித்த பகுதிகளான டென்னிசன் ரோடு, வெள்ளாடிச்சிவிளை, மணிகட்டிபொட்டல், தேங்காயப்பட்டிணம் ஆகிய ஐந்து இடங்களில் உள்ள தலா ஆயிரம் வீடுகள் வீதம் 5 ஆயிரம் வீடுகளை சுகாதாரத் துறையினர் கண்காணித்து வந்தனர்.

மேலும், இந்தப் பகுதிகளை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து வீடு வீடாக சென்று மருத்துவ சோதனைகள் மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத் துறையினரும், மாநகராட்சி ஊழியர்களும் தொடர்ந்து செய்து வந்தனர்.

இந்நிலையில் கரோனா தொற்று சமூக பரவல் ஏற்படாமல் இருக்கம் வகையில் தற்போது கண்காணிக்கப்படும் 5 ஆயிரம் வீடுகளை 40 ஆயிரம் வீடுகளாக விரிவாக்கம் செய்ய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி இனி இந்த 40 ஆயிரம் வீடுகள் இருக்கும் பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று சுகாதாரத் துறையினர் சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க...கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!

ABOUT THE AUTHOR

...view details