தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இனி வீட்டிலேயே சுய தனிமையில் இருக்கலாம்!'

கன்னியாகுமரி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இனி வீட்டிலேயே சுய தனிமையில் இருக்கலாம் எனக் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்துள்ளார்.

collector Prashant vadanere
collector Prashant vadanere

By

Published : Sep 3, 2020, 1:29 PM IST

இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 1ஆம் தேதிக்குப் பின் கோவிட்-19 தொற்றல் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் சுய தனிமையில் இருக்க தமிழ்நாடு அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி கோவிட்-19 தொற்று உடைய நோயாளிகள் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு அழைத்துவரப்பட்டு விரிவான பரிசோதனைக்குப் பின் கீழ்க்கண்ட நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டு சுய தனிமையில் இருந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி, தனிமையில் இருப்பவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறை, மருத்துவக் குழு வாட்ஸ்அப் அல்லது செல்போன் அழைப்புகள் மூலம் நோயாளிகளின் உடல்நலம் குறித்து கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்ட சுய தனிமைப்படுத்தல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வீட்டு சுய தனிமையில் இருக்கும்போது காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவக் குழுவிற்குத் தெரியப்படுத்த வேண்டும்.

நோயாளிகளுடன் இருக்கும் நபர்கள் வீட்டு சுய தனிமையில் இருக்க வேண்டும். வீட்டு சுய தனிமையில் இருக்கும் நோயாளி உபயோகப்படுத்த கழிவறையுடன்கூடிய தனி அறை வீட்டில் இருக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் கழிவறை வசதியுடன் தனி அறைகள் இருக்க வேண்டும். நோயாளியை கவனித்துக்கொள்ளவும் தேவையான பொருள்களை வாங்கி வரவும் நோய்த்தொற்று இல்லாத 18 வயது முதல் 50 வயதிற்குள்பட்ட ஆரோக்கியமான ஒரு நபர் இருக்க வேண்டும்.

நோயாளி வீட்டுத் தனிமை பற்றிய உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும். வீட்டுத் தனிமைப்படுத்துதல் மருத்துவக் குழுவின் நேரடி பரிசோதனைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டே அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திறக்கப்படாத கொள்முதல் கிடங்கு: மழையில் நனைந்து வீணாகும் நெல்!

ABOUT THE AUTHOR

...view details