தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகர், திருமணம் நடத்த அனுமதி கோரி குவிந்த மக்கள்! - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி: திருமணம் நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 23) ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா பரவும் அபாயம்: குமரியில் திருமணத்திற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்!
கரோனா பரவும் அபாயம்: குமரியில் திருமணத்திற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்!

By

Published : Jun 23, 2020, 1:20 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன.

ஊரடங்கு அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்கள் முடிய உள்ளது. இன்னும் திருமண மண்டபங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

மே மாதங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, பொதுமக்கள் வீடுகளில் கட்டுப்பாடுகளுடன் திருமணங்களை நடத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறைகளுக்கு உள்பட்டு திருமணம் நடத்த விரும்புவோர் அதற்கான அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.

அதன்படி மாவட்டத்தில் திருமணம் நடத்த அனுமதி கேட்டு ஏராளமானோர் மனு அளித்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 23) ஒரே நாளில் திருமணம் நடத்த அனுமதி கேட்டு மனு கொடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். இதில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் நின்றதால் கரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க...'உச்ச நீதிமன்ற கட்டளைகளை அரசு பின்பற்ற வேண்டும்'- மு.க. ஸ்டாலின் அறிக்கை!

ABOUT THE AUTHOR

...view details