தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டு திறப்பு - கன்னியாகுமரி அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : வெள்ளமடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டினை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

கரோனா சிறப்பு வார்டு திறப்பு
கரோனா சிறப்பு வார்டு திறப்பு

By

Published : Jun 1, 2021, 11:49 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பெரியவர், சிறியவர் என அனைத்து வயதினரும் நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அரசு, தனியார் மருத்துவமனை படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கன்னியாகுமரியில் இதுவரையிலும் குழந்தைகளுக்கென்று தனியாக சிறப்பு வார்டு என்று எதுவும் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் வெள்ளமடம் பகுதியில் அமைந்துள்ள அகத்திய முனி தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (மே,31) திறந்து வைத்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “கரோனா இரண்டாவது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அகத்திய முனி மருத்துவமனையில் 32 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆறு தீவிர சிகிச்சை படுக்கைகளும், ஆறு ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், ஆறு ஆக்ஸிஜன் அல்லாத படுக்கைகளும், பதினான்கு சிறப்பு படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 24 மணி நேரமும் குழந்தைகள் மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் குழந்தைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க : இந்தியாவில் சரிவைச் சந்தித்துவரும் கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details