தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதுகாப்பு நடவடிக்கை: படகுகள் கடலுக்குச் செல்ல தடை! - kanniyakumari corona safety measure

கன்னியாகுமரி: கரோனா பரவலை தடுக்கும் விதமாக விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை இணை இயக்குனர் ராஜதுரை தடை விதித்துள்ளார்.

படகுகள் கடலுக்குச் செல்ல தடை
படகுகள் கடலுக்குச் செல்ல தடை

By

Published : Jul 27, 2020, 7:24 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடலோர கிராமங்களான ஆரோக்கியபுரம், கோவளம், சின்னமுட்டம், மேல மணக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இரவில் மீன்களை ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர்.

அப்போது துறைமுகத்தில் வியாபாரிகள் அதிகமாக கூடுவதால் தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை. இத்தகவல் மீன்வள துறையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து கடலோர கிராமங்களான சின்னமுட்டம், கோவளம், கீழ மணக்குடி, மேல மணக்குடியில் உள்ள விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லக் கூடாது, மறு அறிவிப்பு வரும் வரை உத்தரவு தொடரும் என மீன்வளத்துறை இணை இயக்குனர் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

இதனால் கடற்கரை பகுதிகளில் படகுகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கரோனா தொற்றின் ஹாடஸ் ஸ்பாட்டாக மாறும் வங்கிகள்: அச்சத்தில் தவிக்கும் ஊழியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details