குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களைக் காக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் அவசரகால அழைப்பு எண்ணான 1077 அறிவித்து பொதுமக்கள் தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அழைக்கலாம் என்று அறிவித்துள்ளது.
அதேபோல நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட அறை அமைக்கப்பட்டு மருத்துவர்கள் பணியில் தயார் நிலையில் இருந்துவருகின்றனர்.
கரோனா வைரசிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முகக்கவசங்கள் வாங்கச் சென்றால், இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு நாகர்கோவில், அதனைச் சுற்றியுள்ள மருந்தகங்களில் அதிக விலை கூறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்ட மருந்தகங்கள் இதையும் படிங்க: கரோனா பாதுகாப்பு: மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி நடவடிக்
கை