கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக ராஜபாளையம் பட்டாலியனைச் சேர்ந்த 60 சிறப்புக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தை அடுத்துள்ள அஸ்தம்பட்டியைச் சேர்ந்த சிறப்புக் காவலர் விக்னேஷ் ராஜாவுக்கு (25) கரோனா சிறப்புப் பணிக்காக நகர்கோவிலில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அவரை கரோனா பரிசோதனைக்காக நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் அங்கு சிகிச்சை மேற்கொள்ளாமல், அவருடன் வந்த நண்பர்களுடன் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து காவலர்கள் அவரை தேடிவந்தனர். இறுதியில் ஓயர்லஸ் உதவியுடன் குமரி - நெல்லை ஆகிய இரு மாவட்ட சோதனைச் சாவடி மையங்களிலும் உள்ள காவலர்கள் உஷார்படுத்தப்பட்டனர்.
கரோனா அச்சம்:பரிசோதனைக்கு பயந்து காவலர் தப்பி ஓட்டம்! அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் நாங்குநேரி சோதனைச் சாவடியில் உள்ள காவலர்கள், அப்பகுதிக்கு வந்த விக்னேஷ் ராஜா மற்றும் அவரது நண்பர்களை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் மீண்டும் அவரை நாகர்கோவில் அரசு மருத்துவமனை கரோனா பரிசோதனை பிரிவில் அனுமதித்தனர். அவருடன் வந்த நண்பர்கள் மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்