கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் ஒரே நாளில் இரண்டு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதன்படி, கோட்டார் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் உடல்நிலை மோசமடைந்து திடீரென மரணமடைந்தார்.
இதேபோல நாகர்கோவில் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் ஜூலை 12ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சூழலில் 24 மணி நேரத்தில் குழித்துறையில் அரசு மருத்துவர் ஒருவருக்கும், கொல்லங்கோடு பகுதி தீயணைப்பு வீரர்கள் இரண்டு பேருக்கும், நீதிமன்ற ஊழியர், மாவட்ட சிறை அலுவலர் உள்பட 140 பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2339ஆக அதிகரித்துள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.