தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் எம்எல்ஏ மகன் உட்பட 82 பேருக்குக் கரோனா - latest kanyakumari news

கன்னியாகுமரி: மாவட்டத்தில் எம்எல்ஏ மகன் உட்பட 82 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Apr 10, 2021, 7:47 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் 2ஆவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று(ஏப்ரல்.10) முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. இதற்கிடையில் குமரி மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் நேற்று(ஏப்ரல்.09) ஒருநாளில் மாவட்டத்தில் எம்எல்ஏ ஒருவரது மகன், நாகர்கோவிலைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி உட்பட 82 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் சுமார் 2000 பேருக்கு நடந்த சளிப் பரிசோதனையில் 54 பேருக்கும், தனியார் லேபில் 30 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

மேலும் முதல்கட்டத்தாக்குதலின் போது வாசனை இழப்பு, தொண்டை வலி, காய்ச்சல், தொடர் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன. ஆனால், உருமாறிய கரோனா எந்தவித அறிகுறியும் காட்டாமல் நேரடியாக நுரையீரலுக்குள் நுழைந்து மெல்ல, மெல்ல வேலையைக் காட்டுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:வேகமெடுக்கும் கரோனா: பொதுமக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details