தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி: காவல்துறை சார்பில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரோனா விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் காட்சி
கரோனா விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் காட்சி

By

Published : Mar 18, 2020, 5:10 PM IST

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க, மத்திய மாநில அரசுகள், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அரசு சார்பிலும், தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

காவல் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு

இந்நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கன்னியாகுமரி காவல்துறை சார்பில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பரசு தலைமையில் காவல் துறை, சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

அப்போது அவர்கள், கரோனா வைரஸ் குறித்து, சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும், கரோனா வைரசினால் ஏற்படும் நோயின் அறிகுறிகள் குறித்தும், நோய் பரவும் விதங்கள் குறித்தும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினர்.

இதையும் படிங்க:கரோனா அச்சம்: அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details