கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தினசரி கரோனா தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கிவருகிறது. இதனால் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் போடப்பட்டுவந்தன. இதில், தடுப்பூசி போட மக்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அரசின் விழிப்புணர்வு
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒன்பது அரசு மருத்துவமனைகள், 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 41 மினி கிளினிக்குகள், 42 தனியார் மருத்துவமனைகள் என மாவட்டம் முழுவதும் 140 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டுவந்தன.
நாள்தோறும் 300 முதல் 400 நபர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுவந்த நிலையில் அரசின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தடுப்பூசி போடவந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரமாக உயர்ந்தது.
தடுப்பூசி தட்டுப்பாடு
போதிய தடுப்பூசிகள் அரசுத் தரப்பில் இருப்பு இல்லாததால் தொடர்ந்து நான்கு நாள்களாகத் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதால், தடுப்பூசி போடவரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
முதல்நிலை தடுப்பூசி போட்ட 28 நாள்களில் இரண்டாம்கட்ட தடுப்பூசி போடவேண்டியவர்களுக்கும், தடுப்பூசி போடமுடியாமல் வருத்தத்துடன் சென்றனர்.