தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை - சுகாதார அலுவலர்கள் தீவிரம் - kanniyakumari district news

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் சுகாதார அலுவலர்கள் வீடுவீடாக சென்று வெப்ப பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

corona-affected-sencorona-affected-sensesses
corona-affected-senses

By

Published : Apr 18, 2021, 5:03 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 157 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக இதுவரை 18 ஆயிரத்து 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து நாகர்கோவில் வடசேரி பகுதியில் 4 குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கு பாதிப்பு எற்பட்டது. தனியார் வீட்டு உபயோக பொருள் விற்பனை நிலைய ஊழியர்கள், மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள், நாகர்கோவிலை சேர்ந்த மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. ஊழியர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷாவின் நேரடி மேற்பார்வையில், 52 வார்டுகளிலும் 308 கொசு ஒழிப்பு பணியாளர்கள் துணையுடன் சுகாதார அலுவலர்கள் வீடுவீடாக தனிநபர் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதோடு கபசுர குடிநீர் வினியோகத்தை தொடங்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details