தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2020, 7:17 PM IST

ETV Bharat / state

குமரியில் கரோனா பாதிப்பு உயர்வு

குமரி: கத்தார், மாலத்தீவு உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வந்த இருவர், சென்னையில் இருந்து வந்த பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கரோனா தொற்று உறுதி செய்யபட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Corona affected increased  கன்னியாகுமரியில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு  கரோனா  கன்னியாகுமரி கரோனா எண்ணிக்கை  Corona affected increased in Kanniyakumari  Corona affected  Number Of Corona affected in Kanniyakumari
Corona affected increased in Kanniyakumari

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த, 16 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், தற்போது புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கத்தாரில் இருந்து குமரி வந்த மகாதானபுரத்தைச் சேர்ந்த ஒருவர், மாலத்தீவில் இருந்து நித்திரவிளைக்கு வந்த எஸ்.டி மாங்காட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட வெளி நாடுகளில் இருந்து வந்த இருவர் மற்றும் சென்னையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு வந்த பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதே போல், கடந்த நான்கு நாள்களுக்கு முன், குமரி மாவட்டம் மயிலாடிக்கு சென்னையில் இருந்து வந்து கரோனாவால் உயிரிழந்த முதியவரின் மகன் உட்பட நான்கு பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா காலத்தில் தூத்துக்குடி துறைமுகம் எவ்வாறு செயல்படுகிறது - துறைமுகத் தலைவர் டி.கே.ராமசந்திரன் பிரத்யேக பேட்டி

ABOUT THE AUTHOR

...view details