கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(55). மரத்தச்சு வேலை பார்க்கும் இவர் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில், தலையில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோட்டார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு! மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு பகுதியில் வைத்து கொலை செய்து வீட்டில் வீசிச்சென்றனரா, எதற்காக கொலை செய்யப்பட்டார் ? என்பது குறித்து மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ''அபராதம் வாங்கவில்லை'' சமூகவலைதளங்களில் பரவும் போக்குவரத்து ஆய்வாளரின் மோசடி!