கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (டிச.22) சமையல் கலைஞர்கள் மற்றும் தொழிளார்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கூட்டம் நடைப்பெற்றது.
கரோனா காலத்தில் அவதிபட்ட கலைஞர்கள்:
இதில் சென்னை, திருச்சி, மதுரை என தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சமையல் கலைஞர்கள் மற்றும் தொழிளார்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது, “கரோனா ஊரடங்கு காலத்தில் ஒன்பது மாதங்களாக தொழில் இழந்து, எந்த வித வருமானமுமின்றி தமிழ்நாடு முழுவதிலுமுள்ள பத்து லட்சம் சமையல் கலைஞர்கள், தொழிளார்கள் அவதிப்பட்டு வந்தனர்.