கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விஜயதாரணிக்கு காங்கிரஸ் தலைமை சீட் கொடுத்தது. இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் சாமுவேல் ஜார்ஜ், சுயேச்சையாக போட்டியிட விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 19) வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாமுவேல் ஜார்ஜ் பேசுகையில், “ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் மாநில கமிட்டி இல்லை. கேஎஸ் அழகிரி, வேணுகோபால், மணிசங்கர் அய்யர் ஆகியோர் இடைதரகர்கள் போல் செயல்பட்டு பாஜகவுக்கு விசுவாசமாக உள்ளனர்.