தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் மரியாதை - காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

கன்னியாகுமரி: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

party
party

By

Published : Nov 19, 2020, 12:22 PM IST

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரகாந்தியின் 103ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் டெரிக் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் மாவட்டதலைவர் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கன்னியாகுமரி காங்கிரஸ் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details