கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட வேண்டிய அனைத்து பொருட்களையும் பொதுமக்களுக்கு வழங்கவில்லை எனவும் ஒவ்வொரு கடையிலும் 30 விழுக்காடு வரையிலான குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
நியாய விலைக்கடை குளறுபடிகளை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்பாட்டம் - நியாய விலைக் கடை குளறுபடிகளை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்பாட்டம்
கன்னியாகுமரி: நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கல்குளம், கிள்ளியூர் உள்பட நான்கு வட்ட வழங்கல் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்டித்து கல்குளம், கிள்ளியூர், திருவட்டார், விளவங்கோடு வட்டங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தக்கலையில் உள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் கருங்கலில் உள்ள கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் எடை குறைவாக பொருட்கள் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. தங்கள் கோரிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் முறையிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஒரு மணிநேர போராட்டத்திற்குப்பின் கலைந்து சென்றனர்.