கன்னியாகுமரியில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, தேவர கட்டு சரஸ்வதி தேவி, குமாரகோயில் முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் நவராத்திரி விழாவிற்காக கேரள அரசால் பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
பின்னர் இந்த சாமி விக்ரகங்கள் அரண்மனையிலிருந்து, மன்னர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த நிகழ்வின்போது வழிநெடுக பக்தர்கள் சுவாமி விக்ரகங்களை வழிபடுவார்கள்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஊர்வலம் நடைபெறாது என கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மன வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் எப்போதும் போல் இந்த விழா நடைபெற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நவராத்திரி விழாவை நடத்த வலியுறுத்தி பத்மநாபபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நவராத்திரி விழா: கொலு பொம்மைகள் விற்பனை அமோகம்