மத்திய பாஜக அரசு அண்மையில் மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து அமல்படுத்தியது. இதனால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என மத்திய அரசு கூறி வரும் நிலையில், இது கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் என்றும், இதன் மூலம் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் பெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் இச்சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.