கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி உள்பட முக்கிய பொறுப்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.
வசந்தகுமார் நினைவிடத்தில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அஞ்சலி - vasanthakumari memorial at agastheesvaram kanyakumari
கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
vk
அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், சஞ்சய்தத், மயூராஜெயக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த், குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்