கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் மு வடநேரேவிடம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்எல்ஏ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் எம்எல்ஏ வேட்புமனுத் தாக்கல்! - காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் எம்எல்ஏ
கன்னியாகுமரி: நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்எல்ஏ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
vasanthakumar
இதில் அவருடன் திமுக எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர். மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையை சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர் வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குமரியில் சரக்குப் பெட்டக முனையம் கொண்டு வந்து மாவட்டத்தை அழிக்கக்கூடாது. இதற்கு பதிலாக ஒருங்கிணைந்த மீன் பிடி துறைமுகம் கொண்டு வரப்படும்" என்றார்.