தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் மீனவர்களின் நலன் கருதி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. குறிப்பாக, ‘மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் மத்திய அரசால் கொண்டுவரபட்டுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட விசை படகுகள் சேதமாகி மக்கி போய் உள்ளது. இதனால் பாதிக்கபட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
குமரியில் தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்!
கன்னியாகுமரி : நாகர்கோவிலில் தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவர்களின் நலன் கருதி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழு கூட்டம்.
மீனவர்கள் விசை படகுகளுக்கு 5,000 லிட்டர் டீசல் மானியம் வழங்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில அளவில் பல கடற்கரை மாவட்டங்களைச் சார்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், குமரி மாவட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுபினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அமைப்புச்சாரா தொழிலாளர்களின் பணிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து கூட்டம்
TAGGED:
Congress fisherman meeting