தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களியக்காவிளை சோதனைச்சாவடியில் அடிப்படை வசதிகள் வேண்டி காங். கட்சியினர் போராட்டம்

கன்னியாகுமரி: களியக்காவிளை சோதனைச்சாவடியில் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரக் கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியினர்
காங்கிரஸ் கட்சியினர்

By

Published : Jun 21, 2020, 2:56 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோர் மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடி பகுதியில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மேலும் இந்தச் சோதனைச்சாவடியில் கழிவறை‌, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. அதேபோல இ-பாஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் வெளியூர்களிலிருந்து வருவோர் எல்லைப் பகுதியில் சாலையோரம் உண்ண உணவின்றி தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் சோதனைச்சாவடி பகுதியில் உடனடியாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களான ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜயதரணி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் தக்கலை டிஎஸ்பி ராமசந்திரன் தலைமையிலான காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து கலைந்துசெல்லாத காரணத்தால் அவர்களைக் கைதுசெய்து அருகே உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details