சர்வதேச அமைப்பு சார்பில் டிஜிட்டல் விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கு மாநாடு கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த மாநாடு இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகநாதன் வரவேற்புரையும், தலைவர் ரஞ்சித் சின்கா மாநாடு பற்றிய உரையையும் ஆற்றினர். இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பேசியதாவது, தொழில்துறை புரட்சியின் நான்காவது சகாப்தத்தில் நாம் உள்ளதால் டிஜிட்டல் தொழில்நுட்பமானது விளையாட்டுத் துறையில் ஒரு வீரரின் செயல்திறன் சார்ந்த காரணிகளை தொழில்நுட்ப உதவியுடன் அளவிட்டு அந்த வீரரின் திறனை மேம்படுத்த முடியும் என்று கூறினார்.