தமிழ்நாடு

tamil nadu

தென்னிந்திய திருச்சபை போதகர்களுக்கான 3 நாள் மாநாடு!

By

Published : Nov 6, 2019, 10:14 AM IST

கன்னியாகுமரி: தென்னிந்திய திருச்சபை போதகர்களுக்கான மூன்று நாள் மாநாடு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Conference for Teachers of South India at Kanyakumari, தென்னிந்திய திருச்சபை போதகர்களுக்கான மூன்று நாள் மாநாடு துவங்கியது


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, இலங்கையின் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த போதகர்களுக்கான மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்துவருகிறது.

இந்த ஆண்டு திருச்சபை போதகர்கள் மாநாடு கன்னியாகுமரி சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலய வளாகத்தில் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயர் தாமஸ் கே. உமன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராயர் செல்லையா அனைவரையும் வரவேற்றார்.

Conference for Teachers of South India at Kanyakumari, தென்னிந்திய திருச்சபை போதகர்களுக்கான மூன்று நாள் மாநாடு

இதில் துணை பிரதம பேராயர் பிரசாத் ராவ், சினாடு செயலாளர் ரெத்தினசாகர் சதானந்தா, பொருளாளர் ராபர்ட்புரூஸ், கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராய செயலாளர் பைஜு நிஷித் பால், உபத்தலைவர் தம்பி விஜயகுமார், பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். இம்மாநாட்டில் 700-க்கும் மேற்பட்ட போதகர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் சட்ட வரைவு ஏற்படுத்த பிசியோதெரபி மாநாட்டில் தீர்மானம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details