தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூதாட்டி இறந்து 50 நாட்களாகியும் எந்த மரபணு சோதனை முடிவு தெரியவில்லை..!

மூதாட்டியின் எலும்புக்கூடு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாக போலீசார் கூறி 50 நாட்கள் மேலாகியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை என மூதாட்டியின் மகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்

மரபணு சோதனை முடிவு தெரியவில்லை
மரபணு சோதனை முடிவு தெரியவில்லை

By

Published : Oct 20, 2022, 10:27 PM IST

கன்னியாகுமரி: கஞ்சம்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா தம்பதி குமரி மாவட்ட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செல்லசாமி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வந்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

ஸ்டெல்லா தரப்பில் கொடுத்த மனுவில்,’’கடந்த ஜூன் மாதம் என்னுடைய தாயார் ராமலக்ஷ்மி மாயமானார் இதுகுறித்து நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தோம் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி போலீசார் புகாரை வழக்குப் பதிவு செய்து மாயமான என் தாயைத் தேடிக் கண்டுபிடித்துத் தருகிறோம் என உறுதி அளித்தார்கள்.

மரபணு சோதனை முடிவு தெரியவில்லை என மகள் மனு

மூன்று மாதம் கழித்து அந்த பகுதியில் உள்ள ஒரு எலும்புக்கூடு சிக்கி உள்ளது உங்கள் தாய் தானா வந்து பாருங்கள் என போலீசார் ஸ்டெல்லாவை அழைத்துள்ளார்கள். இவர்களும் நேரில் சென்று பார்த்து தன் தாய் துணிமணிகள் இருந்ததால் தாய் என உறுதி செய்தார்கள். எனவே இதில் மர்மம் இருப்பதால் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி முடிவு வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என போலீசார் கூறியிருக்கிறார்கள்.

டிஎன்ஏ மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி இதுவரை 50 நாட்களுக்கு மேல் ஆகி எந்தவிதமான பரிசோதனை முடிவுகளையும் போலீஸ் தரப்பில் ஸ்டெல்லாவிடம் சொல்லவில்லை என்றும், மேற்கூறிய நடவடிக்கைகள் பற்றியும் தாயின் மரணத்தின் மர்மம் பற்றியும் நடவடிக்கை எதுவும் போலீஸ் தரப்பில் இல்லை எனப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

மரபணு சோதனை முடிவு தெரியவில்லை

இதையும் படிங்க: துளையில் சிக்கி பரிதவித்த தெரு நாய்..பத்திரமாக மீட்பு

ABOUT THE AUTHOR

...view details