குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் அருகே உள்ள வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் உரிய முறையில் பாஸ் பெற்றுக் கொண்டு எம்சாண்ட், ஆற்று மணல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்துவருகிறார்.
இவரும் இவரது உறவினரான மணிகண்டன் என்பவரும் கடந்த 14ஆம் தேதி ராஜாக்கமங்கலம் பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணல் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திலீபன் கடத்தல் மணல் எடுப்பதாகக் கூறி அவர்களைத் தாக்கியுள்ளார்.