தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலித்து கர்ப்பமாக்கியதாக புகார்: இளைஞர் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா! - போலீசார் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தல்

நாகர்கோவில் அருகே காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது வீட்டின் முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காதலித்து  ஏமாற்றியதாக புகார்
காதலித்து ஏமாற்றியதாக புகார்

By

Published : Mar 9, 2023, 10:48 PM IST

இரணியல்:கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நெய்யூரை சேர்ந்தவர் சுகின். பி.எஸ்.சி., பட்டதாரியான இவர், கடந்த சில மாதங்களாக தாம்பரத்தில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் கும்பகோணத்தை சேர்ந்த மணிமொழி வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.

காதலித்து ஏமாற்றியதாக புகார்

இந்நிலையில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், காதலமாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகியதில், மணிமொழி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சுகின் மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு சுகினை வற்புறுத்தியுள்ளார் மணிமொழி.

இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தாம்பரத்தில் இருந்து மணிமொழியை கடந்த 2ம் தேதி ரயிலில் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், மணிமொழியை தாக்கிவிட்டு சுகின் தப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மணிமொழி புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே, நெய்யூரில் உள்ள காதலன் சுகினின் வீட்டுக்கு சென்ற அவர் தர்ணா போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னை ஏமாற்றிய சுகின் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. திருமணம் செய்வதாக என்னை அழைத்து வந்து தாக்கினார். அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்". என்றார். இதைத் தொடர்ந்து மணிமொழி மற்றும் சுகினின் உறவினர்களிடம் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை நில அளவையர் கைது!

ABOUT THE AUTHOR

...view details