சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு 5.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும், தினசரி துப்புரவு பணியாளர்களுக்கு 600 ரூபாய் தினசரி ஊதியம், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சுசீலா, செயலாளர் அந்தோணி முத்து, உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
'சுற்றுலா வளர்ச்சிகான ரூ.5.3 கோடி நிதியை முறையாகப் பயன்படுத்துங்கள்' - கன்னியாகுமரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி: சுற்றுலா வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்த ரூ.5.3 கோடியை முறையாகப் பயன்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அப்போது பேசிய அந்தோனி ராஜ்,"கன்னியாகுமரிக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் இடங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு அடிப்படைவசதிகள் இல்லை. மாவட்டத்தைச் சுற்றி மூன்று இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்கவே அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டம் வலுப்படுத்தப்படும்" என்றார்.