தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மோடி அரசு அதானி நிறுவனத்தின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறது’ - முத்தரசன் விமர்சனம் - கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன்

மோடி அரசு அதானி நிறுவனத்தின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறது. அதானி விவகாரங்களை மூடி மறைக்கவே மோடி அரசு இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன்

By

Published : Mar 26, 2023, 6:03 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன்

கன்னியாகுமரி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது தினசரி கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரம் கூட சபை நடத்த முடியவில்லை. 140 கோடி மக்களுக்காக இயங்க வேண்டிய நாடாளுமன்றம், ஒரே ஒரு நபர் அதானி என்பவருக்காக நடத்தப்படவில்லை. அதானிக்காக பிரதமர் மோடி செயல்படுகிறார்.

அதானி, பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக வெளிப்படையாக வந்த செய்திகள் உண்மையாகும். பிரதமர் தொழிலதிபர்களுடன் நண்பராக இருப்பது தப்பில்லை. ஆனால், அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்படுவது தான் மிகப்பெரிய தவறு. இது சம்பந்தமான கேள்விகள் முன்வைத்தபோது அவர்களால் ஒரு நாடாளுமன்றத்தை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

கடந்த 23 ஆம் தேதி தீர்ப்பு வந்த 4 மணி நேரத்தில் ராகுலின் எம்பி பதவி பறிப்பு, நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி வரக்கூடாது என்ற எண்ணத்தில் சர்வாதிகார அடக்குமுறைகளை மோடி அரசு பின்பற்றுகிறது. பாசிச வரலாறு, ஹிட்லர் வரலாற்றை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மோடி 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின்போது, வெளிநாட்டில் உள்ள கருப்பு பணங்கள் எல்லாம் மீட்கப்படும் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் பணம் அனுப்பப்படும் என்றெல்லாம் சொன்னார்.

அவர் சொன்ன அந்த வாக்குறுதியை கொண்டு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களுக்கு பணம் வாங்கி கொடுக்க முன்வர முடியுமா? இரண்டு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என அறிவித்தார். வேலை வாய்ப்பு தான் கொடுக்க முடியவில்லை. லட்சக்கணக்கான பேர் வேலை இழந்து நடுரோட்டுக்கு வந்துள்ளார்கள்.

2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கர்நாடகத்திலிருந்து யாரும் வழக்கு தொடரவில்லை. அதுவும் குஜராத்தில் இருந்து ஒரு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். இதில், மாநில அரசு ஒரு பக்கம் இருந்தாலும் மத்திய அரசின் பங்களிப்பும் இதில் உள்ளது. பிரதமர் பொருளாதார நிபுணர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கூடாது என அரசை வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசும் பொறுப்பு உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் கருத்துக்களை உரிமைகளையும் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

ஆனால், பாஜக அரசு வந்த பின்பு உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் கருத்து சுதந்திரத்தைப் பறித்து பத்திரிகையாளர்களை கொல்லப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவினுடைய வாக்குறுதிகளில் சட்டரீதியான பாதுகாப்பு மீனவர்களுக்கு கொடுக்கப்படும். ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை மீனவர்களின் உரிமைக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.

இதில், மத்திய மாநில அரசுகள் இலங்கைக்கு பெரும் பொருள் உதவி செய்து வருகிறது. ஆனால், நம் மீனவர்களுக்கு அந்த நாட்டில் இருந்து பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. நாம் பறிகொடுத்த கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இருக்கும் நல் உறவை பயன்படுத்தி மீனவர்களின் வாழ்வாரம் பாதுகாக்கப்பட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:"ஒரு தியாகியின் மகனை துரோகி என்று கூறுவதா?" - பிரியங்கா காந்தி ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details