கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் நாள் பிறந்த ’ஜீவா’ எனும் ஜீவானந்தம், நாகர்கோவிலில் ஆரம்பக் கல்வி கற்றார். அப்போது ஜாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடிய காலம். ஆனால், தனது பள்ளிப் பருவத்திலேயே ஜீவா தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தார்.
தமிழ்நாடு முழுவதும் சென்று பொதுவுடமை சித்தாந்தங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினார். அரசியல் வரலாற்றில் தேச விடுதலைக்கும், சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்த ஜீவானந்தம் 1952இல் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் அவர் பொதுவுடைமை கொள்கைகளுக்காக குரல் எழுப்பினார். பொது வாழ்வில் மக்களுக்காக வாழ்ந்த ஜீவானந்தம், 1963ஆம் ஆண்டும் ஜனவரி மாதம் 18ஆம் தேதி மறைந்தார்.