தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒழும்பிக் போட்டியில் வெல்வதே லட்சியம்..!' - ஆரோக்கிய ஆலிஸ்

கன்னியாகுமரி: "ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்" என்று, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய ஆலிஸ் தெரிவித்துள்ளார்.

arokiya

By

Published : Jul 18, 2019, 6:11 PM IST

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய ஆலிஸ். இவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தங்கி தனது பட்ட படிப்பை பயின்று வருகிறார். இவர் காமன் வெல்த், ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் சாதனை படைக்க வேண்டும் என்ற கனவோடு பயிற்சியும் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் ஆரோக்கிய ஆலிஸ் கலந்து கொண்டார். இதில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் ஆரோக்கிய ஆலிஸ்.

கல்லூரி மாணவி ஆரோக்கிய ஆலிஸ்

போட்டி முடிந்து பதக்கத்துடன் நாகர்கோவிலுக்கு வந்த ஆரோக்கிய ஆலிஸை, அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க நல சங்கம், பளுதூக்கும் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் ஆரோக்கிய ஆலிஸ் கூறுகையில், "ஏசியன் கேம்ஸ், ஒழும்பிக் போட்டிகளில் சாதனை படைப்பதே தன் லட்சியம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details