தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்! - குமரியில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்குதல்

கன்னியாகுமரியில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்று (டிச.23) மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதற்கான மானியத்தை வழங்கினார்.

அம்மா இரு சக்கர வாகனம் வழங்குதல்
அம்மா இரு சக்கர வாகனம் வழங்குதல்

By

Published : Dec 23, 2020, 9:01 PM IST

இதை தொடர்ந்து அவர் கூறியதாவது, “குமரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டம் 2020- 21 ஆண்டிற்கு விண்ணப்பிக் விண்ணப்பங்கள் வருகின்ற 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டினை நிறைவு செய்வதற்கு தகுதிவாய்ந்த உழைக்கும் மகளிரிடமிருந்து போதுமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.

மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலையில், இவ்விண்ணப்பங்கள் மிக மிக குறைந்த அளவிலேயே பெறப்பட்டுள்ளன.

ஆகவே இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குறியீட்டினை விரைந்து நிறைவு செய்வதற்கு ஏதுவாக, தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:6 மாதத்திற்கு மட்டும் தான் அம்மா மினி கிளினிக்கா?

ABOUT THE AUTHOR

...view details