தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முறிந்து விழுந்த தென்னை மரம் - உறவினர்கள் கண்முன்னே பறிபோன இளைஞரின் உயிர் - youth died in kanyakumari

கன்னியாகுமரி: உறவினர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் தென்னை மரம் முறிந்து விழுந்த விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

youth died in kanyakumari
Coconut tree falls youth died

By

Published : Jun 16, 2020, 2:57 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சீதப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (19). டிப்ளமோ பட்டதாரியான இவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து தென் பாறையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு பகுதிக்குச் சென்றிருந்தார்.

இவரது உறவினர்கள் உணவு சமைத்துக்கொண்டுடிருந்தப்போது, அஜித் தோப்பின் அருகே உள்ள ஆற்றில் குளித்துவிட்டு, தோட்டத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீசிய சூறாவளி காற்று காரணமாக தென்னை மரம் முறிந்து அஜித் மீது விழுந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து பூதப்பாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் தென்னை மரம் முறிந்து உறவினர்கள் கண் முன்பே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:முன்னாள் மேயர் வீட்டில் பணிபுரிந்த காவலாளி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details