தமிழ்நாடு

tamil nadu

ஆழ்கடலில் தத்தளித்த மீனவர்கள் - பாதுகாப்பாக மீட்ட கடலோர பாதுகாப்பு படை

கன்னியாகுமரி: ஆழ்கடல் பகுதியில் விசைப்படகு பழுதாகி தத்தளித்து கொண்டிருந்த கன்னியாகுமரி மீனவர்களை கடலோர பாதுகாப்பு படை காவல் துறையினர் மீட்டு கொச்சி துறைமுகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

By

Published : Sep 24, 2020, 5:17 PM IST

Published : Sep 24, 2020, 5:17 PM IST

ETV Bharat / state

ஆழ்கடலில் தத்தளித்த மீனவர்கள் - பாதுகாப்பாக மீட்ட கடலோர பாதுகாப்பு படை

Coast guard rescued 11 fisherman
Coast guard rescued 11 fisherman

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீனவ பகுதியைச் சேர்ந்தவர் ததேயூஸ். இவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் கடந்த 14 ஆம் தேதி 11 பேர் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென விசைப்படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த கடலில் பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு படை காவல் துறையினர் அவர்களை படகில் சென்று மீட்டு இன்று (செப். 24) கேரள மாநிலம் கொச்சியில் உள்ள துறைமுகத்தில் ஒப்படைத்தனர் .

இதையடுத்து ஊர் திரும்பிய மீனவர்கள் தங்களது படகு 15 நாட்டிக்கல் தொலைவில் நங்கூரமிட்டு விடப்பட்டிருப்தாகவும்,இதை மீன்வளத்துறையிர் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details