கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களான கீறிப்பாறை, காளிகேசம், வாளையத்து பகுதிகளில் உள்ள வயல் அதனைச் சுற்றி வட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஈட்டி, தேக்கு என அரிய வகை காட்டு மரங்கள் உள்ளன. இதன் அருகில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ரப்பர் தோட்ட கழகமும் செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் திடீரென்று கிறிப்பாறை வனப்பகுதியில் காட்டுதீ பற்றியது. இந்தக் காட்டுத்தீயானது வேகமாக பரவி அருகில் உள்ள குடியிருப்புகளின் மரங்களுக்கும் பரவத் தொடங்கியது.
கீரிப்பாறை வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பயத்தில் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி பாதுக்காப்பான இடத்திற்குச் சென்றனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, கீறிப்பாறை வனத்தில் ஏற்பட்டுள்ள காட்டுதீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் கீறிப்பாறை - நாகர்கோவில் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க:ஜப்பான் கப்பலிலிருந்து திரும்பிய 161 பேருக்கு கொரோனா இல்லை