தமிழ்நாடு, புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மூன்று நாள்கள் நடைபெறும் தலைமை பண்புகள் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கிற்கு மாநிலத் தலைவர் முரளிகுமார் தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரியிலிருந்து ஏராளமான பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டடத் தொழில் சம்பந்தமான முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான கண்கட்சியும் நடைபெற்றது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் முரளிகுமார், கட்டுமான தொழிலில் மணல் தட்டுப்பாடு நீண்ட நாட்களாக நிலவுகிறது. மணலுக்கு மாற்று மூலப்பொருளான எம்சாண்ட் பயன்படுத்தபட்டாலும் தாராளமாக கிடைப்பதில்லை. தட்டுபாடின்றி எம்சாண்ட் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.